நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

வினோத விபரீதம்.

இயற்கையைமீறிய
இச்சைகளின் கிளர்ச்சி
இதில் ஈடுபாடுகொண்ட 
பலமனங்கள் அதனை நோக்கி
இறைவனின்
கட்டளைகளை ஏளனமாக்கி
இறுமாப்புடன்
செயல்படுது மனிதமனசாட்சி


மரபுகளை அறுத்தெறிகிறது
மனிதனின் உணர்ச்சி
மன இச்சைகளின்மேல்
ஆட்டம்போடுது
மனகிளர்ச்சியின் ஆட்சி


மலர்களை வண்டுகள்
முகர்ந்து புணர்வது
மகரந்த சேர்க்கை
மலரோடு மலர்
முகர்ந்து புணர்வது
மரபற்ற ஓரினச்சேர்க்கை


ஆணையும் பெண்ணையும்
இணைப்பதுதான்
ஆண்டவனின் சட்டம்
அதை
அறுத்தெறிய நினைப்பது
ஆணவத்தின் உச்சம்


தீராத நாகரீகமோகம்
நாளுக்குநாள் அதிகரிப்பு
தீயவைகளின் பக்கமேபோகுது 
சிலமனிதபிறப்பு
தீயென்று தெரிந்தும்
சுட்டுக்கொல்லுது
தேகத்தை நுழைத்து
தீராத பாவம்வந்து சேருமே
இதுபோன்ற தீமைகளுக்கு


மதிகெட்டுவாழும்
இம்மனிதர்களின் போக்கு
மாறிடவேண்டும்
மறையோனுக்கு கட்டுப்பட்டு
ஆணும் பெண்ணும்
இணைந்துவாழ்வதே 
மாபெரும் சிறப்பு-அதை
அறிந்து வாழ்ந்தால்
கிடைக்கும்
இறைவனிடம் பரிசு...


[நேற்றிரவு [நடந்தது என்ன]விஜய் டீவி புரோக்ராமில். ஓரினச்சேர்க்கையின் விபரீதத்தால் பெண் தற்கொலை
இப்படியே தொடரும் நிலை என பட்டியலிடப்பட்டது.

ஒரு பெண்ணை பெண் காதலிப்பதும்
ஒரு ஆணை ஆண்காதலிப்பது.

எங்கே போய்கொண்டிருக்கிறது உலகம்
மேலை நாடுகளில் உலவிய விபரீதமெல்லாம்
வீரநடைப்போட்டபடி கலாச்சாரம் குடியிருக்கும் இடத்திற்குள் காலாரநடைபோடுகிறதாம். பார்க்கவும் கேட்க்கவும் வேதனையாக இருந்தது.

மரபுகளெல்லாம் மண்ணுக்குள் புதைந்துகொண்டிருக்கிறது.
தோண்டியெடுக்கமுடியாதவாறு
காலத்தின் கோலத்தால் கண்மூடித்தனமாக வாழநினைப்போரை நினைத்து வருத்தப்படுவதா.? வசைபாடுவதா?
புரியாமல் புலம்பியபடி... எழுதிவிட்டேன் இக்ககவி]






அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்

22 கருத்துகள்:

  1. மலர்களை வண்டுகள் முகர்ந்து புணர்வது
    மகரந்த சேர்க்கை
    மலரோடு மலர் முகர்ந்து புணர்வது
    மரபற்ற ஓரினச்சேர்க்கை
    ///
    உண்மை என்றுமே இயற்க்கைக்கு புறம்பாய் நடக்க கூடாது ....
    நல்ல கவிதை தோழி

    பதிலளிநீக்கு
  2. கலாச்சார சீரழிவு மட்டுமல்ல, மனித இனத்துக்கே பேரிழிவைத்தரும் செயல்.

    ஆனால் இது சரியா தவறா என்று அரசே விவாதிக்கும் கேவலமான சூழ்நிலைதான் உலகம் முழுவதும்.

    உணர்ச்சிக்கவிதை நல்லா இருக்கு மலிக்கா. (வார்த்தை சிக்கனம், கொஞ்சம் முயற்சித்துப் பாருங்களேன்)

    பதிலளிநீக்கு
  3. நல்லா இருக்கு மலிக்கா....! இயற்க்கைக்கு மாறான விஷயமான்னு சொல்லத் தெரியல????
    ரோம் நாட்டு நாகரிகமே இதை சார்ந்த விஷயமா இருந்த காலமெல்லாம் கடந்துதான் நாம இங்கே நிக்கிறோம்??

    பதிலளிநீக்கு
  4. இந்திய அரசு இதை அனுமதிச்சி தொலைத்திருக்கிறது மலிக்கா. கவிதை அருமை. தேவையான ஒன்று. நவாஸ் சொன்னது புரியவில்லை, அது என்ன வார்த்தை சிக்கனம்?? சுருக்கலா??

    பதிலளிநீக்கு
  5. /வெண்ணிற இரவுகள்....! கூறியது...
    மலர்களை வண்டுகள் முகர்ந்து புணர்வது
    மகரந்த சேர்க்கை
    மலரோடு மலர் முகர்ந்து புணர்வது
    மரபற்ற ஓரினச்சேர்க்கை
    ///
    உண்மை என்றுமே இயற்க்கைக்கு புறம்பாய் நடக்க கூடாது ....
    நல்ல கவிதை தோழி/

    மிக்க நன்றி தோழனே, இயற்க்கைக்கு புறம்பாகத்தானே நடக்கத்துடிக்கிறது இன்றையகாலம்? என்ன செய்ய??

    பதிலளிநீக்கு
  6. கலாச்சார சீரழிவை சாடும் நல்ல பதிவு

    ஆணுக்கு பெண்ணும் பெண்ணுக்கு ஆணும் என்ன கிடைக்காமலா இருக்கிறது இந்நாட்டில் இச்சட்டம் கொண்டுவர

    விஜய்

    பதிலளிநீக்கு
  7. அர்த்தம் பொதிந்த வரிகள்

    சட்டங்கள் போட்டெல்லாம் இதை தடுக்கமுடியாது தனிமனித ஒழுக்கம் தேவை

    ஓரினை சேர்க்கையால் கடும் கோபம் கொண்ட இறைவன் ஒரு ஊரையே புரட்டிப்போட்டதாக திருமறையில் உள்ளது

    பதிலளிநீக்கு
  8. Hi Anbarae

    nanbar rajavamsam solvathu sariyae,,,

    mikka arumai

    Nallathambi

    பதிலளிநீக்கு
  9. //தீராத நாகரீகமோகம் நாளுக்குநாள் அதிகரிப்பு
    தீயவைகளின் பக்கமேபோகுது சிலமனிதபிறப்பு
    தீயென்று தெரிந்தும் சுட்டுக்கொல்லுது தேகத்தை நுழைத்து
    தீராத பாவம்வந்து சேருமே இதுபோன்ற தீமைகளுக்கு//

    பின்னிட்டீங்க மலிக்கா...

    பதிலளிநீக்கு
  10. Kavithaikalai karpanaiyai eluthupavarkal mathiyil unkal kavithai yatharthamaka.... samuka akkaraiyoodu ullathu!

    Meesaikara kavi Bharathi kanuvu kanda puthumai pennai unkalai parkireen!

    - Trichy Syed

    பதிலளிநீக்கு
  11. /S.A. நவாஸுதீன் கூறியது...
    கலாச்சார சீரழிவு மட்டுமல்ல, மனித இனத்துக்கே பேரிழிவைத்தரும் செயல்.

    ஆனால் இது சரியா தவறா என்று அரசே விவாதிக்கும் கேவலமான சூழ்நிலைதான் உலகம் முழுவதும்.

    உணர்ச்சிக்கவிதை நல்லா இருக்கு மலிக்கா. (வார்த்தை சிக்கனம், கொஞ்சம் முயற்சித்துப் பாருங்களேன்)/

    வேதனைகுறிய விசமாக விஸ்வரூபமெடுத்துள்ளது.இறைவன் காப்பாற்றட்டும்அனைவரயும்..

    வார்த்தை சிக்கனம்/ அது அவ்வளவும் கவிதயல்ல நவாஸண்ணா, [அதுதெரியும் இருந்தாலும் வார்த்தை சிக்கனம் வேண்டும் என்றால்] சரியே..

    இனி சிக்கனம் செய்துவிடுகிறேன். குடும்பச்சிலவைத்தான் சிக்கனம் செய்யமுடியவில்லை இதையாவது முயற்சிபோமே.

    பதிலளிநீக்கு
  12. /வானம்பாடிகள் கூறியது...
    ம்ம். நல்லாருக்கு./

    மிக்க நன்றி வானம்பாடிகள்..



    /sarusriraj கூறியது...
    malikka romba nalla irukku/

    மிக்க நன்றி சாருக்கா..

    பதிலளிநீக்கு
  13. /பூங்குன்றன்.வே கூறியது...
    கவிதை நல்லா இருக்கு தோழி !!/

    ரொம்ப மகிழ்ச்சி தோழா..



    /மலர்வனம் கூறியது...
    Kavithaikalai karpanaiyai eluthupavarkal mathiyil unkal kavithai yatharthamaka.... samuka akkaraiyoodu ullathu!

    Meesaikara kavi Bharathi kanuvu kanda puthumai pennai unkalai parkireen!

    - Trichy Syed/

    சந்தோஷமாக இருக்கிறது தாங்களின் கருத்துக்களுக்கு.. மிகுந்த மகிழ்ச்சி மிக்க நன்றி..

    பதிலளிநீக்கு
  14. /லெமூரியன்... கூறியது...
    நல்லா இருக்கு மலிக்கா....! இயற்க்கைக்கு மாறான விஷயமான்னு சொல்லத் தெரியல????
    ரோம் நாட்டு நாகரிகமே இதை சார்ந்த விஷயமா இருந்த காலமெல்லாம் கடந்துதான் நாம இங்கே நிக்கிறோம்??/

    தாங்களின் கருத்துக்களுக்கு எப்படி பதிலலிப்பதென புரியவில்லை.

    இது இயற்கைக்கு மாறான விசயமல்லவா? ஆணுக்கு பெண்ணும் பெண்ணுக்கு ஆணும் அதுதான் இயற்கையின் நீதி. இதைமீறீ பெண்ணும் பெண்ணும் இணைந்தால் தாய்மையடைய முடியுமா?
    மனிதபிறப்புகள் விரிவடைவது எப்படி?
    அதன் பிறகு நீங்களே சிந்தித்துப்பாருங்களேன் உங்களுக்கே புரியும் சகோதரா.
    கருத்துக்களுக்கு மிக்க நன்றி..

    பதிலளிநீக்கு
  15. /இப்படிக்கு நிஜாம்.., கூறியது...
    இந்திய அரசு இதை அனுமதிச்சி தொலைத்திருக்கிறது மலிக்கா. கவிதை அருமை. தேவையான ஒன்று. நவாஸ் சொன்னது புரியவில்லை, /அது என்ன வார்த்தை சிக்கனம்?? சுருக்கலா??//

    அப்படித்தான்னு நினைக்கிறேன்..

    என்ன கொடுமை நிஜாம். தனிமனித ஒழுக்கம் தலை நிமிர்ந்துநின்றால் அதற்கெல்லாம் வேலையிருக்காது..

    மிக்க நன்றி நிஜாம்..

    பதிலளிநீக்கு
  16. /கவிதை(கள்) கூறியது...
    கலாச்சார சீரழிவை சாடும் நல்ல பதிவு

    ஆணுக்கு பெண்ணும் பெண்ணுக்கு ஆணும் என்ன கிடைக்காமலா இருக்கிறது இந்நாட்டில் இச்சட்டம் கொண்டுவர

    விஜய்/

    அதானே சகோதரரே கிடைக்கும்போதே இப்படியென்றால்????

    எல்லாம் காலத்தின் கோலம்..
    நன்றி சகோதரர் விஜய்..

    பதிலளிநீக்கு
  17. /ராஜவம்சம் கூறியது...
    அர்த்தம் பொதிந்த வரிகள்

    சட்டங்கள் போட்டெல்லாம் இதை தடுக்கமுடியாது தனிமனித ஒழுக்கம் தேவை

    ஓரினை சேர்க்கையால் கடும் கோபம் கொண்ட இறைவன் ஒரு ஊரையே புரட்டிப்போட்டதாக திருமறையில் உள்ளது./

    ஆமாம் ராஜவம்சம். லூத்நபிஅவர்கள் வாழ்ந்த காலத்தில், இந்தவெக்கக்கேடாக செயலுக்காக இறைவனைஅஞ்சிக்கொள்ளுங்கள் எனஎத்தனையோ அறிவுறைகளும் லூத்நபியின்மூலம் எச்சரிக்கப்பட்டும் திருந்தாத அச்சமுதாயத்தை, எறிகற்கள்மூலம் பெரு மழையின்மூலம் அவர்களை தண்டிதாக திருமறையில்
    [பாகம் 8-அல் அஃராப்: 80, 81, 82, 83, 84. ]ஆகிய வசனங்களிலும் இன்னும் நிறைய இடத்திலும் கூறப்பட்டுள்ளது.

    தனிமனித ஒழுக்கமும் இறையச்சமும் இல்லாவிடில், இதுபோன்ற பாவங்கள் பெருகிகொண்டேதானிருக்கும்..

    பதிலளிநீக்கு
  18. /nallathambi கூறியது...
    Hi Anbarae

    nanbar rajavamsam solvathu sariyae,,,

    mikka arumai

    Nallathambi/

    வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி நல்லதம்பி..

    பதிலளிநீக்கு
  19. Kanchi Murali

    எங்கே போய்கொண்டிருக்கிறது உலகம்

    மேலை நாடுகளில் உலவிய விபரீதமெல்லாம்

    வீரநடைப்போட்டபடி கலாச்சாரம் குடியிருக்கும் இடத்திற்குள் காலாரநடைபோடுகிறதாம். பார்க்கவும் கேட்க்கவும் வேதனையாக இருந்தது.

    "மரபுகளெல்லாம் மண்ணுக்குள் புதைந்துகொண்டிருக்கிறது.

    தோண்டியெடுக்கமுடியாதவாறு

    காலத்தின் கோலத்தால் கண்மூடித்தனமாக வாழநினைப்போரை நினைத்து வருத்தப்படுவதா.? வசைபாடுவதா?

    புரியாமல் புலம்பியபடி... எழுதிவிட்டேன் இக்ககவி" உண்மையில் 'எனது சிந்தனைகள் உனது கவிதை'யில் வரிகளாய் - ஓர் கவிஞனின் நியாயமான சமூகக் கோபம்.... பாராட்ட வார்த்தைகள் இல்லை கவிஞனே!

    அன்புடன் - Kanchi Murali

    பதிலளிநீக்கு

என் கவிக்குழந்தைக்கு தாலாட்டு
உங்கள் கருத்துகள்.

என் கவியுற்றுக்கு நீரோட்டம்
உங்கள் கருத்துகள்

என் கவிகிறுக்கல்களுக்கு கைதட்டல்
உங்கள் கருத்துகள்

என் கவிப்பிழைகளுக்கு நறுகென்ற குட்டு
உங்கள் கருத்துகள்.

ஆகவே அனைத்தும் நீங்கள்
அதனுள்ளே ஓரமாய் நான்..

அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது