நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

தமிழே! தமிழா!


தமிழே தமிழே உனை நானும் மறவேனா
தமிழே தமிழே உனைநானும் பிரிவேனா

தமிழே தமிழே தாலாட்டும்கேட்டேனே
தமிழே தமிழே தாய்மடியும் நீதானே

தமிழே தமிழே உன்எழுத்து பூச்சரம்
தமிழே தமிழே உன் வார்த்தை பூபாளம்
தமிழே தமிழே உன்பேச்சு தேன்கொஞ்சும்

தமிழே தமிழே தமிழர்கள் தம்மண்ணில்
தமிழே தமிழே தமிழர்கள் படும்பாடு
தமிழே தமிழே நீபார்த்தாலும் சகிக்காது

தமிழே தமிழே தமிழர்கள் உன்மக்கள்
தமிழே தமிழே உன்பிள்ளை கண்களிலே
தமிழே தமிழே கண்ணீரும் வரலாமோ

தமிழா தமிழா தமிழ்மைந்தர்களின் ஈனத்தை
தமிழா தமிழா துப்புரவாய் துடைத்திடவே

தமிழா தமிழா தூயவனாம் இறைவனிடம்
தமிழா தமிழா துணிவைத்தரசொல்லி வேண்டிடுவோம்

தமிழே தமிழே எனதருமை தாய்த்தமிழே
தமிழ்மொழிதான் எனக்கென்றும் தாய்மொழியே......

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்

16 கருத்துகள்:

  1. ரொம்ப ஸ்வீட் கவிதை நம்ம தமிழை பற்றி..அழகா இருக்கு..

    பதிலளிநீக்கு
  2. தமிழின் தமிழே நீவிர் நீடூழி வாழ்க

    விஜய்

    பதிலளிநீக்கு
  3. தமிழே”த்” தமிழே..
    தமிழா”த்” தமிழா..

    என்று வருமா??? த் வராது என்று நினைக்கிறேன்... நீங்க சொல்லுங்க :-)

    //தூயவனாம் இறைவனிடம் துண்வைத் தர..//

    மோனை ரசித்தேன்

    கவிதையின் நோக்கமும் மொழியும் அழகு ...

    பதிலளிநீக்கு
  4. ரொம்ப நல்ல இருக்கு...
    பட்டு லயத்தில் எழுதி இருக்கீங்க....

    பதிலளிநீக்கு
  5. தமிழை தமிழ் படுத்திய விதம் அழகு....

    பதிலளிநீக்கு
  6. ஆஹா தமிழ் கவிதை அருமை. தமிழ் பற்றி படிப்பது தேன் உண்ணுவது போன்றது..

    பதிலளிநீக்கு
  7. //இறைவனை நேசி இன்பம் பெறுவாய்//

    அருமையான வார்த்தைகள், வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  8. Thamzhil patriya kavithai thamzhilpool inimaiyai irrunthathu..

    Cinema padal mettil nalla irrunthathu...

    - Trichy Syed

    பதிலளிநீக்கு
  9. பூங்குன்றன்.வே கூறியது...
    ரொம்ப ஸ்வீட் கவிதை நம்ம தமிழை பற்றி..அழகா இருக்கு..

    மிக்க நன்றி தோழமையே..



    /கவிதை(கள்) கூறியது...
    தமிழின் தமிழே நீவிர் நீடூழி வாழ்க

    விஜய்/

    மிக்க நன்றி சகோதரே..

    பதிலளிநீக்கு
  10. /கமலேஷ் கூறியது...
    ரொம்ப நல்ல இருக்கு...
    பட்டு லயத்தில் எழுதி இருக்கீங்க..../

    முதல்வருகைக்கும் அழகானகருத்திற்க்கும்
    மிக்க நன்றி கமலேஷ்,

    மீண்டும் வருக..



    கடைக்குட்டி கூறியது...
    தமிழே”த்” தமிழே..
    தமிழா”த்” தமிழா..

    என்று வருமா??? த் வராது என்று நினைக்கிறேன்... நீங்க சொல்லுங்க :-

    எடுத்துட்டோம் த் தை..

    //தூயவனாம் இறைவனிடம் துண்வைத் தர..//

    மோனை ரசித்தேன்

    கவிதையின் நோக்கமும் மொழியும் அழகு ...
    /

    மிகுந்த சந்தோஷம் மிக்க நன்றி கடைக்குட்டி, அடிக்கடி வந்துபோங்க..இந்த கடையிலும் டீ நல்லா போட்டுத்தருவோம்..

    பதிலளிநீக்கு
  11. புலவன் புலிகேசி கூறியது...
    ஆஹா தமிழ் கவிதை அருமை. தமிழ் பற்றி படிப்பது தேன் உண்ணுவது போன்றது..


    ஆமாம் புலிகேசி தமிழாச்சே தேன்தமிழ்..


    /க.பாலாசி கூறியது...
    தமிழை தமிழ் படுத்திய விதம் அழகு..../

    தமிழே கேட்டுக்கொள் தமிழன் பாராட்டுகிறான்..நன்றி பாலாஜி

    பதிலளிநீக்கு
  12. /லெமூரியன்... கூறியது...
    நல்லா இருக்கு மலிக்கா....!

    மிக்க நன்றி லெமூரியன்


    /தியாவின் பேனா கூறியது...
    தமிழ்ப் பற்று அதிகமோ/

    அதிகமோ அதிகம் தியா..

    பதிலளிநீக்கு
  13. சிங்கக்குட்டி கூறியது...
    //இறைவனை நேசி இன்பம் பெறுவாய்//

    அருமையான வார்த்தைகள், வாழ்த்துக்கள்.

    மிகுந்த சந்தோஷம் மிக்க நன்றி சிங்ககுட்டி,

    தொடர்ந்து வாருங்கள்....


    மலர்வனம் கூறியது...
    Thamzhil patriya kavithai thamzhilpool inimaiyai irrunthathu..

    Cinema padal mettil nalla irrunthathu...

    - Trichy Syed/

    ரொம்ப மகிழ்ச்சி திருச்சி சையத்..

    தொடர் ஊக்கத்திற்க்கு மிக்க நன்றி,..

    பதிலளிநீக்கு
  14. தமிழில் தமிழுக்காக, தமிழருக்காக நல்ல கவிதை.

    வேண்டிலாம் - வேண்டிடலாம் (வேண்டிடுவோம்) என்று இருக்க வேண்டுமோ

    பதிலளிநீக்கு

என் கவிக்குழந்தைக்கு தாலாட்டு
உங்கள் கருத்துகள்.

என் கவியுற்றுக்கு நீரோட்டம்
உங்கள் கருத்துகள்

என் கவிகிறுக்கல்களுக்கு கைதட்டல்
உங்கள் கருத்துகள்

என் கவிப்பிழைகளுக்கு நறுகென்ற குட்டு
உங்கள் கருத்துகள்.

ஆகவே அனைத்தும் நீங்கள்
அதனுள்ளே ஓரமாய் நான்..

அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது