நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

நாந்தானுங்க



நாட்டுக் கோழி பேசுறேன்
நானும் கூட்டம் கூட்டமாக பறக்கும்
பறவைகள்போல் பறக்கனும் என்றுதான்
ஆசைப்படுகிறேன் ஆனால் முடியவில்லையே பறக்க


சிறகுகள் இருந்தும் சக்தியில்லாததால்
குப்பைமேடுகளிலும் கூரைகளிலும் 
பறந்து பறந்துதான் -என் ஆசைகளை
நிறைவேற்றுகிறேன் என்ன செய்ய

என்விதியை நினைத்து வெந்துசாகிறேன்
மன்னிக்கவும்,,,,,,,,,,,, செத்து வேகிறேன்...



அன்புடன்: மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெருவாய்

21 கருத்துகள்:

  1. வெந்துசாகிறேன்
    மன்னிக்கவும்,,,,,,,,,,,, செத்து வேகிறேன்...

    தோழியே மிக அருமை
    நாம் நா சுவைக்கு ஒரு உயிரை பழி வாங்குகிறோம்

    பதிலளிநீக்கு
  2. /என்விதியை நினைத்து வெந்துசாகிறேன்
    மன்னிக்கவும்,,,,,,,,,,,, செத்து வேகிறேன்.../

    =)) ரசித்தேன்.ருசித்தது. அட கோழி இல்லைங்க. கவிதை.

    பதிலளிநீக்கு
  3. ம்ம்ம்.... KFCக்கெதிரா கெளம்பற சங்கத்துல சேர்ந்துடிங்களா :-)

    பதிலளிநீக்கு
  4. கோழியின் மனக்கனவா?

    நல்லாயிருந்ததது

    பதிலளிநீக்கு
  5. ///என்விதியை நினைத்து வெந்துசாகிறேன்
    மன்னிக்கவும்,,,,,,,,,,,, செத்து வேகிறேன்..//

    ஹா ஹ ஹா. சுவையாத்தான் இருக்கு சகோதரி. கோழியும், கவிதையும்.

    பதிலளிநீக்கு
  6. /தோழியே மிக அருமை
    நாம் நா சுவைக்கு ஒரு உயிரை பழி வாங்குகிறோம்/

    என்ன செய்வது தோழரே, அப்படி பார்த்தால் தண்ணீர் குடிப்பதே ஆகாதுன்னு ஆகிப்போகும் ஏன்னா அதிலும் ஜீவராசிகள் உயிவாழ்கின்றன,

    மனிதனைப் படைத்து அவனுகென்று பூமியிலுள்ள அனைத்தையும் கொடுத்திருக்கிறான், தேவையானவைகள் அவரவர் எடுத்துக்கொள்ளட்டும் என்பதற்காக, சரிதானே தோழரே..

    பதிலளிநீக்கு
  7. /=)) ரசித்தேன்.ருசித்தது. அட கோழி இல்லைங்க. கவிதை./

    இரண்டையுமேன்னு சொல்லுங்க அப்படித்தானே வானம்பாடிகளாரே:]

    பதிலளிநீக்கு
  8. /லெமூரியன் கூறியது...
    ம்ம்ம்.... KFCக்கெதிரா கெளம்பற சங்கத்துல சேர்ந்துடிங்களா :-)/

    உடல்நலத்திற்கு கேடுவிளைவிக்கும் எதுவும் நம்மளுக்கு வேணாமுங்க, ஆனா இது அது இல்லைங்க...

    பதிலளிநீக்கு
  9. /பிரியமுடன்...வசந்த் கூறியது...
    கோழியின் மனக்கனவா?

    நல்லாயிருந்ததது/

    எல்லாரும் கனாக்கானும்போது பாவம் கோழியும் கண்டுட்டு போகட்டுமே:]

    பதிலளிநீக்கு
  10. //என்விதியை நினைத்து வெந்துசாகிறேன்
    மன்னிக்கவும்,,,,,,,,,,,, செத்து வேகிறேன்...
    //

    அருமை மலிக்கா....இந்த இரண்டு நாட்களில் நான் படிக்கும் நான்காவது கோழிப்பதிவு இது....

    பதிலளிநீக்கு
  11. ஆசைகள் நிராசைகளாக...
    நிறைவேறாத ஆசைகளுடன் மரணித்துப் போன உணர்வுகளை படம் பிடித்துக் காட்டியுள்ளீர்கள். வரிகள் சுவைக்கின்றன.

    பதிலளிநீக்கு
  12. சமைக்கும் போது யோசிச்ச கவிதையாக்கும்? நல்லா இருக்கு!!

    பதிலளிநீக்கு
  13. மலிக்கா உங்கள் கவிதை அழகாக உள்ளது

    உங்களுக்கு பத்துக்கு பத்து பகுதியில் இருந்து ஓர் அழைப்பு ஏற்றுக் கொள்வீர்களா ?

    http://theyaa.blogspot.com/2009/11/blog-post_04.html

    பதிலளிநீக்கு
  14. கவிதையின் அரசியே ஒரு கோழியின் ஆசையை அழகா சொல்லிருக்கிங்க.

    பதிலளிநீக்கு
  15. சிறகுகள் இருந்தும் சக்தியில்லாததால்

    குப்பைமேடுகளிலும் கூரைகளிலும்
    பறந்து பறந்துதான் -என் ஆசைகளை

    நிறைவேற்றுகிறேன் என்ன செய்ய

    .... ithu kooliyin nilai mattum alla... thirami irrunthum veliil theriyatha ethanaiyu thiramaisalikalin kuralakavum ennakku thondrukirathu....

    - Trichy Syed

    பதிலளிநீக்கு
  16. /ஹா ஹ ஹா. சுவையாத்தான் இருக்கு சகோதரி. கோழியும், கவிதையும்/

    மிக்க நன்றி நவாஸண்ணா..

    பதிலளிநீக்கு
  17. /அருமை மலிக்கா....இந்த இரண்டு நாட்களில் நான் படிக்கும் நான்காவது கோழிப்பதிவு இது..../

    நன்றி புலிகேசி, அங்கங்கே கோழிகூவுதுன்னு சொல்லுங்க..

    பதிலளிநீக்கு
  18. /சமைக்கும் போது யோசிச்ச கவிதையாக்கும்? நல்லா இருக்கு!!/

    அதேதான் ஷஃபி. வேறவேலையும் செய்யனுமுள்ள இதையும் யோசித்துக்கொண்டே அதையும் செய்தேன்...

    பதிலளிநீக்கு
  19. /மலிக்கா உங்கள் கவிதை அழகாக உள்ளது/

    மிக்கநன்றி தியா..

    உங்களுக்கு பத்துக்கு பத்து பகுதியில் இருந்து ஓர் அழைப்பு ஏற்றுக் கொள்வீர்களா ?

    இதோ ஏற்றுக்கொண்டு கிறுக்கியிருக்கேன் தியா எனக்கு தெரிந்தவைரையில்..

    பதிலளிநீக்கு
  20. /பூங்கோதை கூறியது...
    ஆசைகள் நிராசைகளாக...
    நிறைவேறாத ஆசைகளுடன் மரணித்துப் போன உணர்வுகளை படம் பிடித்துக் காட்டியுள்ளீர்கள். வரிகள் சுவைக்கின்றன./

    வருக வருக பூங்கோதை பெயரிலேயே மணக்கிறீர்கள்.
    தாங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிம் தொடர்ந்து வாருங்கள்..

    பதிலளிநீக்கு

என் கவிக்குழந்தைக்கு தாலாட்டு
உங்கள் கருத்துகள்.

என் கவியுற்றுக்கு நீரோட்டம்
உங்கள் கருத்துகள்

என் கவிகிறுக்கல்களுக்கு கைதட்டல்
உங்கள் கருத்துகள்

என் கவிப்பிழைகளுக்கு நறுகென்ற குட்டு
உங்கள் கருத்துகள்.

ஆகவே அனைத்தும் நீங்கள்
அதனுள்ளே ஓரமாய் நான்..

அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது