வரமா--சாபமா
உன்
ஓரவிழிப்பார்வையில்
என்னுள்ளம்
ஈரமாய் நனைந்தது
நனைந்த நினைவுகளை
நித்தமும் நினைக்கின்றேன்
உன்னை
நினைத்த நாள்முதலாய்
நிலவு சுடுகிறது
நெருப்பு குளிர்கிறது
காகம் மயிலானது
கரும்பு கசப்பானது
கரையில் நிற்க்கும்போதே
மனம்
கடலில் தத்தளிக்குது
தனியாய் புலம்புகின்றேன்
தனிமையை விரும்புகின்றேன்
நீ இருப்பதாய் நினைத்துக்கொண்டு
எனக்குள் நானே சிரிக்கின்றேன்
கார்மேகம் தலையைதொட
வான்மழை மடியில் விழ
வண்ணக்கனவு விழியில் வர
வசமாய் மாட்டிக்கொண்டேன்
உன்வசத்தில்
ஏனிந்த போராட்டம்
எதற்கிந்த ஆர்ப்பாட்டம்
கல்நெஞ்சம் எனக்குள்ளே
கரைந்தோடுது நீரோட்டம்
எனக்குள் நீவந்தாய்
விழிவழியே
மறுஉயிர்தந்தாய்
மறந்துவிட வழியில்லை
மரிக்கின்ற நிலைவரையில்
உன் ஓரவிழிப்பார்வை
என் உயிருக்குள் உறைந்தது
வரமா? இல்லை சாபமா?
விடைசொல் விழியே
நீ
என் விலாசம்வரும்
வரையில்
என்நெஞ்சம் உன்
நினைவரையில்
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெருவாய்"
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
காதலை பற்றிய உங்கள் வரிகள் மிகவும் அருமை
பதிலளிநீக்கு//வசமாய் மாட்டிக்கொண்டேன்
பதிலளிநீக்குஉன்வசத்தில்//
என்வசமிழந்தேன், உங்கள் கவிதை சாரலில்...
சாருவுடைய கருத்துக்களும் அருமை
பதிலளிநீக்குமிக்க நன்றி சாரு
என்மெய்மறந்தேன் உங்கள் கருத்துக்களில்
பதிலளிநீக்குமிகுந்த மகிழ்ச்சி சுமஜ்லாக்கா
//தனியாய் புலம்புகின்றேன்
பதிலளிநீக்குதனிமையை விரும்புகின்றேன்
நீ இருப்பதாய் நினைத்துக்கொண்டு
எனக்குள் நானே சிரிக்கின்றேன்//
எப்டிங்க இதெல்லாம்? ம்.. எனக்குதான் எழுதவே வரல..
//தனியாய் புலம்புகின்றேன்
பதிலளிநீக்குதனிமையை விரும்புகின்றேன்
நீ இருப்பதாய் நினைத்துக்கொண்டு
எனக்குள் நானே சிரிக்கின்றேன்//
எப்டிங்க இதெல்லாம்? ம்.. எனக்குதான் எழுதவே வரல..
அனைத்துக் கவி வரிகளும் அழகாகக் கோர்க்கப்பட்டு சுவைக்கின்றன. வாழ்த்துக்கள்
பதிலளிநீக்கு