மலர்கள்
வண்ண வண்ண மலர்களே
வாசம் வீசும் மலர்களே
வாசலிலும் கொல்லையிலும்
வசந்தம் பாடும் மலர்களே
மலர்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரகமிருக்கும்
மல்லிகையைக் கண்டதும்
மணமாலையின் நினைவுவரும்
முல்லைமலரை கண்டதும்
என் மன்னவனின் நினைவுவரும்
சாதிமல்லி கண்டதும்
சிந்தனையில் சிரிப்புவரும் [மலிரிலுமா சாதி]
சூரியகாந்தி கண்டதும்
சுறுசுறுப்பு கூடவரும்
தாமரையை கண்டதும்
அதன்னுடனே குளிக்கத்தோன்றும்
அல்லியை கண்டதும்
அள்ளி கையில் எடுக்கத்தூண்டும்
அசருமல்லி கண்டதும்
அதன்
அழகியகலர் கண்ணைச்சீண்டும்
தாழப்பூவை கண்டதும்
பாம்புவருமென்ற பயம்வரும்
வேப்பம்பூவை கண்டதும்
அதன்
வாசம் நெஞ்சில் வீசிடும்
அரலிப்பூவை கண்டதும்
கண்கள் கண்ணீர் வடித்திடும்
கனகாமரம் கண்டதும்
காற்றில் மனம் ஆடிடும்
செவ்வந்தி கண்டதும்
நெஞ்சில் சிலிர்ப்பு ஏற்படும்
பாரிஜாத மலர்களால்
மனம்
பரவசம் அடைந்திடும்
காதல்ரோஜா கண்டதும்
மனம்
காதல் வானில் பறந்திடும்
துபை
சலையோர மலர்கள்
தூதுச்செய்தி
அனுப்பிட
நானும் சாலைரோம்
நடந்திட
காற்று கானம்
பாடிட
மலர்கள் தலையை
ஆட்டிட
நடந்து சென்ற
நானும்தான் சற்று
தயங்கி நின்றிட
என் நினைவைப்
புரிந்த என்னவன்
கண்களால்
சைகை செய்திட
இந்த மலரும்
அந்த மலரின்கூட
அமர்ந்திட
மனதெல்லாம் மத்தாப்பாய்
பூத்திட
சீசனுக்கு
ஒவ்வொரு மலர்களென
என்வீட்டுச்
சன்னல்களை அலங்கரிக்கும்
அதைப்பார்த்து பார்த்து
என்மனம் பூரிக்கும்
என் கற்பனைகளுக்கும்
ஒருவிதத்தில்
இவைகள் காரணம்
என் மனவாசலில்
மாம்பூத்தோரணம்.
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெருவாய்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
பூக்களைக் கோத்த தமிழாரம் அழகு
பதிலளிநீக்குபூமி புன்னகைக்க இறைவன் தந்த இதழ்களல்லவா அவை.
பாராட்டுக்கள்
அன்புடன் புகாரி
கவிதைகளஞ்சியமே இக்கவிதைக்கு
பதிலளிநீக்குகவிபாடியது அழகு,
சகோதரர் புகாரிக்கு என் மனமார்ந்த நன்றி
கவிதைகளஞ்சியமே இக்கவிதைக்கு
பதிலளிநீக்குகவிபாடியது அழகு,
சகோதரர் புகாரிக்கு என் மனமார்ந்த நன்றி
ஹாய் தோழி சுகமா என் மல்லிகையே மலர்களை ப்ற்றி கவிதை வடித்தது அருமை. மலர்களை பார்த்து கொண்டுயிருந்தால் மனித்துள்ளிகள் மாயமாகி விடும் மனம் லேசாகிவிடும்
பதிலளிநீக்கு