இருங்க இருங்க படிக்கும் முன் ஒரு செய்தி! என்னான்னா. தமிழ்குடும்பத்தில் ஞாயிற்றுகிழமையிலிருந்து ”மலிக்கா வாரம்.” அதாங்க நம்ம வாரம் ஓடிக்கிட்டு கீது போய் பாக்க நினைக்கிறவங்க போய்பார்த்துவரலாம்.
ஹூம் உஹூம் போய் பாத்துதான் வரனும் சரியா! இல்லேன்னா அழமாட்டேனே![அப்ப்டித்தான் சொல்லிக்கீன்னு அழறது]
உன்
ஓரவிழிப் பார்வைக்குள்
ஒளிந்துகிடக்கும் ரகசியம்
கசியும் மெளனத்தில்
கரையத் தொடங்கியபோது
காதல் கைகூடியதோ
அதனால்தான்
அக்கரையில் நானும்
இக்கரையில் நீயும்
அலைபாயும் நெஞ்சத்தை
அங்குமிங்கும் அசையாது
அணைப்போட முடிந்ததோ
வாழ்க்கையை வழிநடத்திச்செல்ல
காதல்மட்டும் போதாதென்பதால்
காசைத்தேட கடல்தாண்டி நானும்
கானகத்தில்!
கண்ணுக்குள் தோன்றிய காதல்
கண்ணீரோடு கரைந்துவிடாமல்
காலமுழுதும் காதலுடன் வாழ
கண்மணியே!
காத்திருப்பாயா!சிலகாலம்
காசோடு சேர்த்து
காதலுடன் வருகிறேன்
கைகோத்து இருவரும்
கலங்காமல் வாழ்ந்திட.....
அன்பான இர்ஷாத் கதை கட்டுரை கவிதைக்காக!
கொடுத்த இந்தவிருதை பாசதோடு ஏற்றுக்கொண்டு அதை நானும்
பகிர்ந்தளிக்கிறேன்.
புதுமுகம் ரியாஸ்
புதுமுகம் செந்தில்குமார்
பனிதுளி சங்கர் பல அறியாத விசயங்கள் இங்கே சென்றால் அறியலாம்!
செ.சரவணக்குமார். நல்ல எழுத்துநடை..
என் அன்புத்தோழி ஹேமா கவிதை எழுத அசத்தல் ஆளு..
அப்புறம் நம்ம கனி சீமாங்கனி கவிதையிலேயே தொடர்கவிதை எழுதி கலக்கும் ஆளு!
டிஸ்கி//பட்டியல் நீண்டுகொண்டே போக ஆசைதான் அல்லாரும் வாங்கின்னா அப்புறம் வாங்க ஆளேயிருக்காது நான் மறுதபா கொடுக்கோனுமுல்ல!
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
என் ஆக்கங்கள் எப்படியிருக்குன்னு
நீங்க சொன்னாதான் தெரியும். சொல்லுவீங்கதானே!
கனவுக்குள்ளே!
தென்றல் தாலாட்டி-
என்
தலைகோதிட
கண்மூடினேன்
வீசிய காற்றோடு
வம்பளந்தேன்
வாசனைப்பூவோடு
விளையாடினேன்
நீர்வீழ்ச்சியோடு
கோபித்துக்கொண்டேன்
நீர்முகி கப்பலுக்குள்
போராடினேன்
அதிகாலைப்பொழுதில்
மூச்சுமுட்டியதாய்
உணர்ந்து
அயர்ந்தெழும் வேளையில்
தலைகுப்பற
நான்
தலையணையின்
மடியில்…
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
என் ஆக்கங்கள் எப்படியிருக்குன்னு
நீங்க சொன்னாதான் தெரியும். சொல்லுவீங்கதானே!
அன்புமகனும் அழகிய யானையும்..
இந்த போட்டோவை எடுத்தது யார்?
காட்டில் உலவும் யானைக்குடும்பம்
காலார நடக்க ஆசைப்பட்டு
கதை பேசிக்கொண்டே -தன்
குட்டிகளோடு சுற்றிவரவே
காட்டிலொரு சிறுவன் தெரிய
கவனமாய் அவனருகில் வந்து
சிறு விழியால் கண்ணடித்து
சிறுவ னவனை சிரிக்கவைத்து!
தும்பிக்கையால் அவனைத்
தூக்கிதன் முதுகிலேற்றி
வைத்துக்கொண்டு
வனமுழுதும் வலம்வரவே!
வரும் வழியில்
வழிந்தோடும் தண்ணீரைக்கண்டு
தங்கள்முகத்தை தங்களே பார்க்க
துள்ளித் துள்ளிக் குதித் தனவே!
அச்சிறுவன் மனமுழுதும்
ஆனந்தம் பொங்கி டவே!
அதை படம்பிடித்து காட்டியதும்
அன்னையுள்ளம் ஆனந்தமடைந்ததம்மா!
காட்டிலுள்ள மிருகமெல்லாம்
நாட்டில் உலா வருகையிலே!
நாட்டிலுள்ள மனிதமெல்லாம்
காட்டுக்குள்ளே உலவுதம்மா!
ஐந்தறிவு உள்ளதெல்லாம்
ஐம்பொன்னாக மினுமினுக்க
ஆறறிவு உள்ளதெல்லாம்
அறிவு மங்கிப் போனதம்மா!
//டிஸ்கி// முசந்தம் போனபோது கிளிக் எடுத்ததையெல்லாம் கலைச்சாரலில் போட்டுயிருந்தேன் அதை நம்ம அண்ணாத்தே ஜெய்லானி சுட்டுபோட்டைவை இப்படி அழகாய் ஆணைமேல் ஊர்வலம்போகவைத்துவிட்டார் என் அன்புமகனை..
மிக அழகாய் கிரியேட் செய்த அண்ணாத்தேக்கு அல்லாரும் சேர்ந்து ஒரு பாராட்ட போடுங்க அப்படியே ஓட்டையும் கருத்தையும்போட்டு என்அன்புச் செல்லத்துக்கும் அன்பையும் தாருங்கள்..
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)


