நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

நீரோடையில் நீந்தும் நினைவுகள்.

 

கவிபாடினேன் கவியறியாமல்!
வெண்பாக்களோ! மரபுகளோ!
அறியா மனது
ஆரவாரமில்லாமல் அடுக்கடுக்காய்
அள்ளிகொட்டியது
கவிதைச் சொற்களை!
எனக்குத்தெரிந்த என்வரிகளில்!

நான்
கம்பன் வழி வந்தவளில்லை!
கண்ணதாசன் பேத்தியில்லை!
வாலியின் வார்த்தைகள் கேட்டதில்லை!
வைரமுத்துவின்
வாசக்காற்றும் பட்டதில்லை!-
ஆனாலும்
கவியெழுதுகிறேன்!

கவியெனக்குள் புகுந்ததா! -இல்லை
கவிக்குள் நான் புகுந்தேனா?
கேட்டுக் கேட்டுப் பார்க்கிறேன்
மனதிடம் -  அது
காட்டிக்கொடுக்க மறுக்கிறது
கவிவந்த வழிதனையே!

நித்தம் நித்தம் புதுக்கனவு!
நீச்சலடித்து பாய்கிறது
நிகழ்கால நிகழ்வுகளோடு!
நீந்தி நீந்திச்செல்கிறது
நிதர்சனமான உண்மைகளை!
நியாப்படுத்தச் சொல்கிறது.

உறக்கமின்றிச் சிலவேளை!
உணவின்றிச் சிலவேளை!
ஊறரியச் சிலவேளை!
ஊமையாகச் சிலவேளை!-

இப்படி

ஒவ்வொரு நாளும் கழிகிறது!
ஓசையின்றி ஒளிர்கிறது!
ஓராயிரம் கனவுகளை! - உள்ளம்
ஒளிவு மறைவின்றி
ஓடவிட்டுப் பார்க்கிறது!.

கவியென்றுச் சொல்கின்றேன்
ஆனாலது!
கவியா? என்பது தெரியவில்லை
ஆனாலும் எழுதுகின்றேன்!- என்
ஆர்வங்கள் மட்டும் ஓயவில்லை!

நீரோடையின் நீருக்குள்ளே!
நினைவுகளை
நீந்தவிட்டுப் பார்க்கின்றேன்!
நீந்திச்செல்லும் நினைவுகளை-அடி
நெஞ்சுக்குள்!
நிலையாய் தேக்கிக்கொள்கின்றேன்...

இக்கவிதை எனது முதல்கவிதை நூலான ”உணர்வுகளின் ஓசை” யில் இடம்பெற்றுள்ளது.
  முத்துப்பேட்டை ஓ ஆர் ஜியில் ந[எ]ம்மைப்பற்றி கொஞ்சம் எட்டிப்பாருங்கள். ஹாஹா

அன்புடன் மலிக்கா 
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

தனிமை

 


தவிக்கவைக்கும் நினைவுகள்
தவிடுபொடியாகி
தகிடுதத்தோம் பாடியபடி
தலைகீழாய் தொங்கும் வவ்வாலானது!

உயிரின் நிலவறைக்குள் ஒருவித
உணர்ச்சிகளின் தாக்கம்
நிலை[ல]நடுக்கம் கண்டதுபோல்
நிலவறை நிலைதடுமாறியது!

நாவறண்டு உதடு
உமிழ்நீரைத் தடவியது
நீருண்ட மயக்கத்தில்
நீண்டது நிலவொளியில் இரவு!

நிம்மதி நாடிய நெஞ்சுக்குள்
நீட்டி முழங்கிய மெளனம் மட்டும்
நிம்மதியாய்
நித்திரைகொண்டது

நெஞ்சம்மட்டுமேனோ!
நித்திரையை தொலைத்து
நெடுநேரம் கண்விழித்திருந்து
கானல் உண்டது!..



அன்புடன் மலிக்கா 
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

கனவே கலையாதே! 2

 

இருவிழிகளின் கருவிழிகளுக்குள்ளே
காணும் காட்சியாவும் கண்முன்னே!-அது
கனவாவதும் கலைவதும் தினம் தினம்

இரவுநேர இருளுக்குள்ளே
இனம்புரியாதவைகள் சூழ்ந்திருக்க!
 
அசைந்தாடும் காற்றில் பூக்கள்
அள்ளி வீசும் வாசனைகளை
அமங்கலியான பெண் பூக்களும் நுகர!

மாந்தோப்புக்குள்ளே
மஞ்சள் குருவியின் சிறகு படபடக்க!

பொல்லாத குளிருக்கு மயிலும்
போர்வையில்லாது நடுங்க!

கடலுக்குள் கூடிக்கொள்ளும் அலைகள்
கரைக்குவந்து சண்டையிடுக்கொள்ள!

சாலையோர மரங்கலெல்லாம்
சாதி சண்டைகளற்று வரிசையில் நிற்க!

உலகம் உருண்டுவிடாதவாறு
உயர்ந்திருக்கும் மலைகள் தாங்கி நிற்க!

பொட்டலிலும் பாலையிலும்கூட
பச்சை பசேலென இயற்கை காட்சியளிக்க!

வெள்ளிகம்பிபோல் மின்னல் வந்து
விருட்டென்று பயங்காட்டி மறைய!

வெளிர்நிற மேகங்கள்
கருநிற மேகங்களோடு கொஞ்சிக்குலாவ!

வானவில் வட்டமடித்து
வானத்தை அழகுபடுத்த!

வான்மழையை விரும்பி -மண்
வசியம் செய்து அழைக்க!

வாடிய பயிர்களெல்லாம்
வனப்புகண்டு கூத்தாட!

மண்ணிலுள்ள ஜீவன்கள்
மகிழ்ச்சியில் மகிழ்ந்தாட!

நடுங்கும் குளிர்
நாடியை தொட்டு இசைக்க!

காலைத்தென்றலின்  ரிங்காரம்
காதுகளுக்குள் இதமாய் கேட்க!

மிதமான சூட்டோடு
மேனியை மெல்ல மீட்டிய சூரியன்
சுண்டி இழுத்தும் 

சுறுசுறுப்போடு எழும்பாமல் -ஏனோ
சுணங்கிக்கொண்டு மீண்டும் 

கைகால்களை சுருட்டிகிக்கொண்டு
கனவே கலையாதே! -இயற்கைக்
கனவை கலைக்காதேயென
கண்மூடியே கிடக்கசொல்கிறது மனது...

அன்புடன் மலிக்கா 
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது