நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

நிஜமாய்..



டிஸ்கி// எதாச்சையாக ஒரு தளத்துக்குசென்றேன் அங்கே இப்படத்தைப்போட்டு கவிதயெழுதச்சொல்லியிருந்தாகோ. அப்போ அங்கே எழுதமுடியலை!
அதான் இங்கேவந்து கிறுக்கிவிட்டேன். என்ன படத்தைபார்த்து எழுதச்சொன்னாங்க நான் படத்துக்குள்ளேயே சின்ன சின்ன இதயம்வச்சி எழுதிட்டேன் எப்புடியிருக்கு..


இப்படத்திற்க்கு ஷேக் என்கிற ஸ்டார்ஜன் எழுதியது.

ஒருமுறை பார்க்க தோன்றும்
நிலவொளியில் உன் முகம்
அடிக்கடி பார்க்கத் தூண்டும்
போட்டி உனக்கும் நிலாவுக்கும்
ஜெயிப்பது நீயாக இருந்தால்
என் ஓட்டு உனக்குதான் அன்பே..
பிடிச்சிருக்கு அவளை மட்டும்
விரல் கோர்த்து வீதியில்
உலா வருவேன் கூட நீயும்.

அதாறு ஷேக். மச்சிதானே...

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
என் ஆக்கங்கள் எப்படியிருக்குன்னு
நீங்க சொன்னாதான் தெரியும். சொல்லுவீங்கதானே!

நாயா? நானா?

அம்மா அம்மா என்னப்பாரு
அதையும் கீழே எறக்கிவிடு
வயித்துல என்ன சுமந்தியே-இப்போ
வழியில சுமக்க முடியலையா!

அம்மா அம்மா இதக்கேளு
அழுது சொல்லுறேன் கொஞ்சங்கேளு
நாயின் வாழ்வைப் பார்த்தயா!
நா அழறதுக்கூட கேக்கலையா!

பிஞ்சுவிரலை பிடித்துக்கொண்டு
பரக்கப் பரக்க போறாயே
ஒன்னோட வேகத்துக்கு-என்னால
ஓடிவரவும் முடியலையே!

பச்சபுள்ள என்னையும்தான்
பரிதவிக்கவிட்டு விட்டு
செல்லப்பிரணி என்பதனால்
சோக்கா தோளில் சுமந்தாயோ!

நாலுகாலு இருந்தபோதும்
நாயை நடக்க விடுவதில்லை-ஆனா
நான் தத்தித் தத்தி நடக்கிறனே
தடுக்கிக் கீழே விழுகிறனே

பெத்தவளே பெத்தவளே
பிள்ளை சொல்றதக் கேளம்மா
பெத்தெடுத்த பிள்ளையைவிட -உனக்கு
பாசம் அந்த பிராணிமேலா?

உன்பொறுப்பைக் கண்டு வருந்துகிறேன்
உனக்கு மகளாய் வெதும்புகிறேன்
நாயிக்குயிருக்கும் நன்றிகூட
நானிருக்க மாட்டேனென்று நினைத்தாயோ!

அடுத்த ஜென்மம் ஒன்னிருந்தால்
அதில் நீ எனக்கு மகளாகு
பாசமென்றால் என்னவென்று-உனக்குத்
பாடம் படித்துத் தருகின்றேன்...

டிஸ்கி//இதை பாட்டாப் பாடுங்கோ பாப்போம் அம்மா இங்கே வா வா அந்த ரைமிங்கில்[யாரு[ம்மா]ப்பா இந்த போட்டோவ எடுத்தது. அல்லாரும் சாக்கிரதையா இருங்கோன்னு யாரோ பின்னால் இருந்து எச்சரிக்கிறாங்கன்னு நெனக்கிறேன். கையில கேமரவோட அலையுறாக பாத்துங்கோ] ஏன் கேக்குறீங்க இந்தபோட்டோவை பார்க்கசொல்லி கிட்ட தட்ட எனக்கு 20. 25 மெயில்கள்..

அதிலிருந்த வாசகங்கள் ஒவ்வொன்றும் மனதை கஸ்டப்படுத்தினாலும். இன்றைய சில அம்மாக்கள் இப்படியிருப்பதால் எல்லாருக்கும் சேத்து எழுதுறாங்க. என்ன செய்ய ஒரு பானைசோத்துக்கு ஒருசோறு பதமாம். இது எந்த ஊரு நியாங்க.. என்ன கொடுமையிது. அப்படின்னு தலைப்பு வேறு..
இதபாத்த நம்ம மூளை சும்மாயிருக்குமா அதான் இருக்கும் கொஞ்சூண்டு மூளையை  கசக்கிப்பிழிஞ்சி கவிதையின்னு கிறுக்கியிருக்கேன். இதை எழுதியது யார்மனதையும் நோகடிக்கவல்ல. அப்படியிருப்பின் பொருந்திக்கொள்ளவும்..

இப்படத்திற்க்கு ரியாஸ் எழுதிய கவிதை


ஏ.. நிலவே

பூமிக்கு
வந்துவிடாதே
வந்தால்
என் நிலைதான்
உனக்கும்.


துண்டு போட்டு
பங்கு
போட்டுக்கொள்வார்கள்
மனிதர்கள்..
மழைக்கு
காத்திருப்பது போல
பின்
இவர்கள்
இரவுக்கும்
காத்திருக்கலாம்.

ஆமாம்மா செய்தாலும் செய்வாங்க!

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
என் ஆக்கங்கள் எப்படியிருக்குன்னு
நீங்க சொன்னாதான் தெரியும். சொல்லுவீகளா!

நீயின்றி நானேது!....


எனைத்தொடரத்தான்
உனைப் படைத்தானோ!
இல்லை-எனக்குள்
உனைப் புதைத்துதான்
எனைப் படைத்தானோ!

என்னில் நீ
முழுமையாகி -நான்
எழும்போதும் விழும்போதும்
நிற்கும்போதும் நடக்கும்போதும்
முன்னும் பின்னும்
என் எல்லா நிலைகளிலும்
எனக்குளாகிவிட்டாய்!

சிலவேளை
உனைக்கண்டு நான் அதிர!
பலவேளை
எனைக்கண்டு நீ மிரள!

என்னைப்போலவே நீயிருந்தும்
எலும்புகள் ஏதும் உனக்கில்லாததும்!
என் உருவம் அழகாய் இருக்கையில்
எனக்குளிருக்கும் நீ
நிழலாய் தெரிவதும்
உலகப் பாடம் படித்திடவே
மனசாட்சி
நிழல்ப் படமாய் தெரிகிறதோ!

நான் தவறிடாவாறு
கண்கானிக்கிறாய்-என்
மனம்போன போக்கை
கண்டிக்கிறாய்!
மனசாட்சியாய் தண்டிக்கிறாய்!
நிழல்சாட்சியாய் நிந்திக்கிறாய்!

நீ
என்கூடவே வரும்வரை
என்னக்கில்லை மரணம்
நீ
என்னைவிட்டுப் பிரிந்தபின்
எனக்கேது உலகிலே உறைவிடம்.

டிஸ்கி// இப்படத்திற்கான /சிநேகிதன்/ அக்பரின் கவிதை
மரக் காதல்
நீ அமுதை பொழிகிறாய்
நான் அன்பை பொழிகிறேன்
இந்த நேரத்தில்
செங்கதிரோனுக்கு
இங்கு என்ன வேலை?
நீ ஓடி விடாதே நில்..

அக்பர் அங்கேயே நிற்கச்சொல்லி நிலாவுக்கு தூது அனுப்பிச்சாச்சி ஓகேயா.

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

என் ஆக்கங்கள் எப்படியிருக்குன்னு
நீங்க சொன்னாதான் தெரியும். சொல்லுவீங்கதானே!
அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது