நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

ஆத்திரமும் கோபமும்



ஆத்திரம் அழகல்ல
கோபம் நல்ல குணமல்ல

ஆத்திரத்திரத்தினால் ஏற்படும்
அத்தனை செயல்களின் பாதிப்பும்

தன்னைமட்டும் சார்ந்ததல்ல
தன்னைச்சார்ந்தவர்களையும் பாதிக்கும்

ஆத்திரத்தால் எதை சாதிக்கிறாய்
நீ ஆத்திரப்படுகிறாய் என்பதற்காக வேண்டுமென்றால்

அன்றைய காரியங்கள் நிறைவேறும்  -ஆனால்
நாட்கள் நகர நகர அதுவே உனக்கு நரகமாகும்

கோபம் கொள்ளும்போது உன்னை நீ உற்றுப்பார்
உனக்குள் ஒரு மிருகம் இருப்பதை உணர்வாய்

ஆத்திரத்தால் கோபத்தால் அழிவுகளும் வருத்தங்களும்
மிஞ்சுமே தவிர வேறென்ன கிடைக்கும்

இளமையில் ஆத்தித்தையும் கோபத்தையும்
வித்திட்ட மனிதன்

முதுமையில் தனிமையையும் விரோதத்தையும்
அறுவடை செய்கிறான்

ஆத்திரம் அறிவை அகற்றிடும் ஆயுதம்
கோபம் கூடவே இருந்து குழிப்பறிக்கும் கொடுங்குணம்

அன்பினால் சதிக்க முடிந்ததை ஒன்றை
ஆத்திரத்தால் ஒருபோதும் சாதிக்கமுடியாது

குணத்தால் கோடானகோடி பெறுவது சுலபம்
கோபத்தால் சிறு கடுகுகூட கிடைப்பது கஷ்டம்

ஆத்திரமும் கோபமும் மிக மிக மிக
அத்தியாவசியமானால் மட்டுமே கையாளவேண்டும்
அதனைவிட ஆயிரமடங்கு சிறப்பு
அன்பை கையாண்டு வெற்றிகொள்வது..


அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெருவாய்

பிள்ளைநிலா



ஒன்பதுமாதம் முக்குளித்து
வயிற்றுக்குள் உலவிய வெள்ளிநிலா
இடுப்புவலியை உண்டாக்கி
வெளியில் வந்தது பிள்ளைநிலா
வினோத சப்தங்கள் கேட்டிடவே
வீல்லென்று அழுதிட முகம் சிவந்திடுமே


மூடிய மலர்விழி முனுமுனுக்க
மெதுவாய் திறந்தது இமை இரண்டை
கருவறை இருள்கண்ட கறுவிழிகள்
உலகொளி பட்டதும் மூடியதே


கையும் காலையும் கட்டிக்கொண்டு
கர்ப்பபையிற்குள் இருந்த பிள்ளை
பிஞ்சிக்கால்கையை பிரித்துக்கொண்டு
விறித்து உதைத்து துள்ளியதே


கண்கள் இரண்டையும் மூடிக்கொண்டு
நமட்டுச்சிரிப்பு சிரித்திடவே
நரியை விரட்டிச்சிரிக்கிறதாம் என்றுச்சொல்லி
நம்மையும் சிரிக்கவைத்திடுமே


நெற்றியை நுகர்ந்து பார்க்கையிலே
நாசியில் வாசம் ஏறிக்கொள்ளும்
மீண்டும் மீண்டும் அவ்வாசம்
நுகர்ந்து நுகர்ந்து பார்க்கத்தூண்டிடுமே


பசித்து குழந்தை அழுகையிலே
அள்ளியனைத்து அன்னை பால்தருவாள்
இதற்குமுன் தொப்புள் வழியே உண்டதற்கு
அதுஅறியாமல் முட்டிமோதிடுமே


பாலை அருந்திய மயக்கத்திலே
பச்சிளம் பிள்ளை உறங்கிடுமே
உறக்கும் பிள்ளையைப்பார்த்துக்கொண்டே
உறங்காமல் இருப்பது ஒரு சுகமே..




அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெருவாய்

என்று மாறும்!!!!!



ஒரு [பஸ் ஸ்டாப்] பேருந்து நிலையத்தில்  இருஅம்மாக்கள் தங்களின் குழந்தைகளுடன் பஸ்ஸிற்காக நின்றுகொண்டிருக்கும்போது

எதிர்சுவற்றில் ஒட்டியிருந்த மோசமானபோஸ்டர்
ஒன்றைபார்த்த அந்தசிறுமி தன் அம்மாவிடம்
அம்மா அம்மா பாவம்மா அந்தஅக்கா ரொம்ப ஏழவீட்டு அக்காமாதரி இருக்குமா அதானாலதான் அவுக தங்கச்சியோட பாவாடையை
போட்டு இருக்காக ரொம்ப ரொம்ப சின்னதா இருக்குமா
அதப்போயி படம்வேற புடிச்சிக்கீறாங்கம்மா என்று தன் பிஞ்சிமுகத்தில் பாவனையைகாட்டி அனுதாபத்தை வெளியிட.

எங்கடிம்மா என்று நிமிர்ந்து தன் குழந்தை நீட்டிய திசையில் பார்த்த அந்த அம்மாவின் முகம்போனபோக்கில் சீ கர்மம் கர்மம் ஏந்தான் இவளுகல கடவுள் படைத்தாரோ இப்படி அரகொறையா திறியவா என்று முனுமுனுத்துக்கொண்டே, சும்மயிருடி அத்த இத்த பார்த்து கைய்யகிய்யக்காட்டமா, என்று சட்டென தன் மகளையும் இழுத்துக்கொண்டு முகத்தை வேறுபுறம்திரும்ப.

பக்கத்தில் நின்ற மற்றொரு சிறுவன் தன் அம்மாவைபார்த்து
எப்பப்பாத்தாலும் நம்ம அப்பா உன்னய சீலையா எடுத்து காச கரியாக்குறா காச கரியாக்குறான்னே கத்திகிட்டே இருக்காருள்ளம்மா அத நீதாம்மா கேக்கமாட்டெங்கிற எப்பப்பாத்தாலும் புடவ புடவையா வாங்கி அப்பாட காசயெல்லம் வீணாக்குறத்துக்கு

இதுபோல் சின்னபாவாடை வாங்கினால் காசமிச்சப்படுத்தலாமுள்ள என்று சொல்லிமுடிக்கும்முன் விழுந்தது ஓர் அடி முதுகில், விர்ரென்று வலிக்க
அழுதுகொண்டே பார்த்தான் அம்மாவை

சனியனே இந்த எழவுக்குத்தான் உன்ன என்கிட்டும் கூட்டிகிட்டுபோவவே
சடவா வருது, எல்லாம் இந்த பாழாப்போன பட்டணத்துக்காரங்களும் சினிமாக்காரங்களும் செய்யிற வேளயால
இந்த பச்சபுள்ளயெல்லாம் கெட்டு குட்டியச் சுவராபோவுது,
எந்த எடத்துக்கும் கூடிக்கிட்டு போவமுடியல அங்கினக்கங்கின ஒரே ஒட்டுதுணியபோட்டுகிட்டு நிக்கிதுக ஆடுதுக அத்தவேற போட்டாபுடிச்சி இவுகபோடுறாக, பொண்ணா பொறந்த மானவெக்கம் வேணும் இவுகளுக்கு அதெல்லாம் ஒன்னுமில்லையோடி கண்ணாத்தா, இவுக கெட்டுபோறதோட மத்தவுகளையும் கெடுத்து நாசம்பன்னுதாகளே  இவுக தாயிதகப்பன், சாதிசனம் யாரும் இத்த தப்புன்னு சொல்லமாட்டாகளோ,
என்ன காலமுண்டியிது அந்த கடவுள்தான் காப்பாத்தோனும்

அவுகளையல்லடி நம்மளத்தான் வா ன்னு சொல்லியபடி
மகனின் கையை தர தர வென இழுத்துச்சென்றாள் பொன்னம்மா.

என்னத்த சொல்லி என்னபண்ணக்கா என்னக்கித்தான் மாறுமோ இத்தப்போல உருப்படாத பொலப்பெல்லாம் நாமசொல்லியா எதுவும் மாறப்போவுது
இதெமாதரி மனுசங்கயெல்லாம் பிஞ்சிலேயே பழுத்துட்டாங்க இனி வெம்பித்தான் கீழேவிழுவாங்க, கேட்டா வயித்து பொழப்புக்குன்னுவாங்க
என்னமோ இவுகளுக்குமட்டுந்தேன் வயிறு பொழப்பு எல்லாம்,
நாமல்லாம் இல்லை கஞ்சியானாலும் குடிச்சிக்கிட்டு கிழிஞ்சதானாலும் மானத்தை மறச்சிக்கிட்டு,


காலம்போக போக இன்னும் இந்த உலகம் எப்படி இருக்கப்போவுதோ!
இந்த கண்ட்றாவி கலியுகத்தில்
நாமா நம்ம பசங்கள சாக்கிறதைய பாத்துவளக்கோனுமக்கா அப்புறம் கடவுள்விட்டவழி- ன்னு கண்ணாத்தாவும் தன் அருமைமகளின் கைகளை சற்று நடுக்கத்துடன் பிடித்தபடியே பொன்னம்மாவின் பின்னே போய் பஸ்ஸிலேறி அமர்ந்தார்கள், பஸ்ஸின் சன்னல்வழியே மீண்டும் போஸ்டர் எதிரே அரைகுறையாட எதிர்காலம் நினைவில் ஓட
காலத்தின் கோலத்தை நினைத்தபடி, கவலையில்
இருவரும் இருக்கையில் சாய்ந்தார்கள்...




அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெருவாய்
அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது