நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

நிழலைத் தேடும் நிஜங்கள்..

நளினவேடந்தரித்து
நடக்கும் அத்தனையும்
நிஜமென்று நம்பி
நடக்கும் மனமே!

நிழல்கூட நம்கூடவரும்போது
நிஜமாகிறது
நிழலாய் நடப்பதை
நிஜங்களென நினைக்கவைத்து

நிழலை நிஜமென நினைத்து
நிஜத்தை இழந்துவிடும் நெஞ்சமே!
நிஜங்கள்கூட நிஜங்களல்ல
நிலையற்ற இவ்வுலகில்

நிஜமான நட்பு
நீங்கும் பிரிவாக
கண்காணும்போதே
கானல் நீராகி

நிஜமான காதல்
நிழலென்ற கருப்பாக
நினைவிருக்கும்போதே
நீங்கிய வெறுமையாகி

நிஜமான பாசம்
நிலையற்ற நேசமாக
நிலையில்லா உலகைப்போல்
நிலை தடுமாறி

நிஜமான அத்தனையும்
நிழலாகிப் போகிறது
நிலையற்ற அத்தனையும்
நிஜமாக ஆகிறது

நிழலும் நிஜமும்
நிலையற்றுவிட்டதால்
நிலையான ஒன்றைதேடி
நிதமும் அலையும் மனம்

நிஜத்தை அருகில்வைத்துக்கொண்டே
நிழலுக்கு அலைகிறதே!
நிலையற்ற மனம்....

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
நீங்கள் ஊக்கமென்ற கருத்தும், ஓட்டும் தந்தால்
இந்த நீரோடை நிரம்பி வழியும் கவிதைநீரால்.

35 கருத்துகள்:

  1. நிழலைக்கூட நிஜமாக காட்ட உன்னால் முடியும் மல்லி.

    அருமையான கவிதை
    எதார்த்தை அப்படியே எடுத்துக்காட்டிவிட்டாய்.

    வாழ்த்துக்கள்..தொடர்ந்து இன்னும் இதுபோன்றகவியை எதிர்ப்ப்பர்க்கிறேன்..

    பதிலளிநீக்கு
  2. எப்படி மல்லி இப்படியெல்லாம் கலைச்சாரலில் உன் திறமைகளைக்கண்டுவிட்டு வந்தால் இங்கே கவியுணர்வை கண்டு வியந்து நிற்க்கிறேன் ஆலினார் மல்லிக்கா அப்படின்னு சொல்லவா.

    சூப்பர் கவிதை இனி தொடர்ந்து வருவோமுல்ல..

    பதிலளிநீக்கு
  3. மிகவும் அருமையான கவிதை வாழ்த்துக்கள் மலிக்கா

    ஆட்டம் அதிரடியாய் ஆடத்தொடங்கிட்டீங்க போல. அசத்துங்க சீமாங்கனி சொன்னதுபோல...

    பதிலளிநீக்கு
  4. நிஜமான அத்தனையும்
    நிழலாகிப் போகிறது
    நிலையற்ற அத்தனையும்
    நிஜமாக ஆகிறது

    .... nice.

    பதிலளிநீக்கு
  5. நிஜமான அத்தனையும்
    நிழலாகிப் போகிறது
    நிலையற்ற அத்தனையும்
    நிஜமாக ஆகிறது

    நான் தலை ஆட்டுவதர்க்கெல்லாம்
    என்னோடு சேர்ந்து தலையாட்டும்
    நண்பனை விட, என் நிழலே எனக்கு மேல்.
    ----------------------------------
    நிஜமான காதல்
    நிழலென்ற கருப்பாக
    நினைவிருக்கும்போதே
    நீங்கிய வெருமையாகி

    அழிக்க முடியாத வரிகள் என்றும் மனதில் நிற்பவை.
    -----------------------------
    இன்றைய காதலர்களின் கவிதையைப் பாருங்கள் :

    என் இனிய தமிழ் அழகியே !
    உன்னை ஆங்கில பாடவேலை முடிந்து !
    இயற்ப்பியல் கூடத்தில் பார்த்தப்போது !
    என்னுள் சில வேதியியல் மாற்றங்கள் !
    என் உயிரியலில் நீ கலந்து விட்டாய் !
    கச்சிதமாக கணக்கு போட்டுவிட்டேன் !
    நீ சம்மதித்தால் சமூகவியலில் சாதிக்கலாம் !
    மறுத்தால் வரலாறு மன்னிக்காது உன்னை !

    எப்படிலாம் கவிதை எழுதுறானுங்க பாததியலா ?

    எனக்கு பிடித்ததே உங்கள் இலக்கிய வார்த்தைகள், உங்களின் படைப்புகளில் ஆயிரம் அர்த்தங்கள் அது எல்லோருக்கும் புரிந்திடாது.(என்னையும் சேர்த்து)

    உமக்கு இந்த ஆற்றலைத் தந்த இறைவனுக்கே எல்லாப் புகழும்.

    இன்னும் நிறையா தொகுக்கலாம்னு பார்த்தேன், குடம் வழிஞ்சிடப் போகுதுன்னு விட்டுட்டேன் (நீரோடை)

    வாழ்த்துக்கள் !!!

    பதிலளிநீக்கு
  6. malli un kavithai maththiyil yaarooda kaviyum wikkamudiyaathunnu sollukira alavuku vawthuthuduvingka poola

    superrrrrrrrrrr kavi

    பதிலளிநீக்கு
  7. அற்புதமான கவிதை உங்களுக்கு நிகர் நீங்களே அசத்துறீங்க மல்லி.

    உங்க கவிக்கே தனி ஈர்ப்புதான். மீன்உம் சொல்கிறேன் அசத்தலாய் நிழலை நிஜமாய் வடித்த நிஜக்கவிதை..

    தினமும் பார்ப்பேன் உங்க தளம் கருத்து இப்பொதுதான் கருத்தருகிறேன் இனி நேரம்கிடைக்கும்போது நிச்சயம் தருவேன்.என் கருத்துக்களை.

    வாழ்த்துக்கள் மலிக்காகுட்டி..

    பதிலளிநீக்கு
  8. அருகில் வைத்து கொண்டே அலையும் மனம் - சரியா சொன்னீங்க

    பதிலளிநீக்கு
  9. அருமையான யதார்த்தமான...பட்ட அனுபவங்களால் மனதை நெருட கவிதை மல்லிக்கா.

    நிழல் எது நிஜம் எது ?
    கண்டு பிடிக்கக் கஸ்டமாயிருக்கே !

    பதிலளிநீக்கு
  10. நிஜத்தை அருகில்வைத்துக்கொண்டே
    நிழலுக்கு அலைக்கிறதே!
    நிலையற்ற மனம்....

    அற்புதமான வரிகள்.

    பதிலளிநீக்கு
  11. நிழலா...?
    நிஜமா ...?
    நிச்சயமாய் மனதில்
    நீங்காத கவிதை இது

    பதிலளிநீக்கு
  12. //நிஜத்தை அருகில்வைத்துக்கொண்டே
    நிழலுக்கு அலைக்கிறதே!
    நிலையற்ற மனம்....//


    அருமை!!!!

    மலிக்கா அக்கா "நி"-ல நின்னு அடிச்சுருகீங்க...அருமை...என்னை கவர்ந்தவரிகள்....வாழ்த்துகள்....

    பதிலளிநீக்கு
  13. நிஜத்தை அருகில்வைத்துக்கொண்டே
    நிழலுக்கு அலைக்கிறதே!
    நிலையற்ற மனம்....

    அருமையான வரிகள்.

    பதிலளிநீக்கு
  14. நிஜமா நிஜமா நல்லா இருக்குங்க...

    பதிலளிநீக்கு
  15. அடேங்கப்பா!! வார்த்தைகளில் விளையாடி இருக்கிறீர்கள்.

    பதிலளிநீக்கு
  16. //நிஜத்தை அருகில்வைத்துக்கொண்டே
    நிழலுக்கு அலைக்கிறதே!
    நிலையற்ற மனம்....//

    உண்மை..

    க‌விதை ந‌ல்லா இருக்கு மலிக்கா அக்கா...

    பதிலளிநீக்கு
  17. ////நிஜமான நட்பு..... நீங்கும் பிரிவாக
    கண்காணும்போதே.....கானல் நீராகி

    நிஜமான காதல்..... நிழலென்ற கருப்பாக
    நினைவிருக்கும்போதே.....நீங்கிய வெருமையாகி

    நிஜமான பாசம்.....நிலையற்ற நேசமாக
    நிலையில்லா உலகைப்போல்.....நிலை தடுமாறி

    நிஜமான அத்தனையும்
    நிழலாகிப் போகிறது////

    இந்த வரிகள் அத்தனையும்
    உண்மை...! சத்தியம்...! யதார்த்தம்...!

    ஓஹோ...!
    கற்பனைக் கவிதை வடிப்பவர் மலிக்கா என நினைத்தேன்...!
    யதார்த்தமான கவிதையும் நீங்கள் வடிப்பீரா?

    யதார்த்தமான...
    அருமையான கவிதை...!

    வாழ்த்துக்கள்...

    நட்புடன்...
    காஞ்சி முரளி...

    பதிலளிநீக்கு
  18. எப்படி மல்லி இப்படியெல்லாம் சூப்பர் நிஜத்தை நிஜமாய் சொல்லியிருக்கீங்க
    உங்க கவிதை திறன் மிக அருமை

    பாராட்டுக்கள்

    நட்புடன் அனு

    பதிலளிநீக்கு
  19. நிஜத்தை அருகில்வைத்துக்கொண்டே
    நிழலுக்கு அலைக்கிறதே!
    நிலையற்ற மனம்....

    கவிதையின் வரிகள் எதார்த்தத்தை பிரதிபலிக்கிறது.


    ஆனால் நம்மிடையே உள்ள பிரச்சனை எது நிஜம் ஏது நிழல் என்று பிரிதெரிப்பது.அதனால் நிஜத்தை அருகில் வைத்துகிட்டு மனம் தேடி அலைப்பாய்கிறது நிங்கள் சொல்வது போல்.பாரட்டுகள் சகோதரி

    பதிலளிநீக்கு
  20. மிக மிக அருமையான கவிதை வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  21. நிஜத்தை அருகில்வைத்துக்கொண்டே
    நிழலுக்கு அலைகிறதே!
    நிலையற்ற மனம்.

    நிஜம் என்றால் மனைவி.
    நிழல் என்றால் மாற்றாள்.
    சரியாக்கா.

    பதிலளிநீக்கு
  22. நளினவேடந்தரித்து
    நடக்கும் அத்தனையும்
    நிஜமென்று நம்பி
    நடக்கும் மனமே!

    இந்த மாய உலகினில்
    நடப்பதையெல்லாம் நீ
    உண்மை என நம்பி
    இயங்குகின்ற என் இதயமே
    --------------------------
    நிழல்கூட நம்கூடவரும்போது
    நிஜமாகிறது
    நிழலாய் நடப்பதை
    நிஜங்களென நினைக்கவைத்து

    நான் தனிமையில் நடக்கையில்
    என் நிழலே நம்புகிறேன்
    நடக்காத ஒன்றை
    நடந்ததைப் போல் சித்தரித்து.
    ----------------------------
    நிழலை நிஜமென நினைத்து
    நிஜத்தை இழந்துவிடும் நெஞ்சமே!
    நிஜங்கள்கூட நிஜங்களல்ல
    நிலையற்ற இவ்வுலகில்

    பொய்யை உண்மை என நம்பி.
    நட்ப்பை(மனைவி) இழக்கும் நெஞ்சமே.
    சில நேரம் உண்மை கூட பொய்யாகிவிடும்.
    இந்த நிலையற்ற உலகில்
    ------------------------------
    நிஜமான நட்பு
    நீங்கும் பிரிவாக
    கண்காணும்போதே
    கானல் நீராகி

    இந்த அவதூறினால்
    உண்மையான வாழ்க்கையும்
    கண்ணீர் மழையாகி
    நம் கண்ணெதிரே பிரிவோம்.
    ---------------------------------
    நிஜமான காதல்
    நிழலென்ற கருப்பாக
    நினைவிருக்கும்போதே
    நீங்கிய வெறுமையாகி

    காதல் உண்மையாக இருக்குமெனில்
    அந்த அவதூறை சுய நினைவோடு.
    ஏற்க மறுத்து விடு
    --------------------------------
    நிஜமான பாசம்
    நிலையற்ற நேசமாக
    நிலையில்லா உலகைப்போல்
    நிலை தடுமாறி

    நமது அன்பு உண்மையெனில்
    இந்த நிலையற்ற உலகைப்போல
    வாழாமல் இணைந்து இருப்போம்
    ---------------------------------
    நிஜமான அத்தனையும்
    நிழலாகிப் போகிறது
    நிலையற்ற அத்தனையும்
    நிஜமாக ஆகிறது

    உண்மைகள் எல்லாம்
    பொய்யகிபோகிறது
    பொய்கள் எல்லாம்
    உண்மை ஆகிறது.
    --------------------------------
    நிழலும் நிஜமும்
    நிலையற்றுவிட்டதால்
    நிலையான ஒன்றைதேடி
    நிதமும் அலையும் மனம்

    பொய்யும் உண்மையும்
    கலந்து விட்டதால்
    எது சரி என்று
    ஏங்கித் தவிக்கிறது மனம்.
    --------------------------------
    நிஜத்தை அருகில்வைத்துக்கொண்டே
    நிழலுக்கு அலைகிறதே!
    நிலையற்ற மனம்....

    கட்டிய மனைவியை
    பக்கத்தில் வைத்துக்கொண்டே
    மாற்றாளை காண அலைகிறது
    குரங்கு மனம்.
    ------------------------------

    உபதேசம் : அவன் சொன்னான் ..இவன் சொன்னான் என்று மனைவிய சந்தேகிக்காமல் நல்லப் புருசனாக இரு.

    சரியக்கா மலிக்காக்கா

    பதிலளிநீக்கு
  23. சுதாகர் கூறியது...
    நிழலைக்கூட நிஜமாக காட்ட உன்னால் முடியும் மல்லி.

    அருமையான கவிதை
    எதார்த்தை அப்படியே எடுத்துக்காட்டிவிட்டாய்.

    வாழ்த்துக்கள்..தொடர்ந்து இன்னும் இதுபோன்றகவியை எதிர்ப்ப்பர்க்கிறேன்..

    நிச்சயம் தங்களின் எதிர்ப்பார்ப்புகளின் படி எழுத முயற்ச்சிக்கிறேன் சுதாகரண்ணா...

    மிக்க நன்றி..

    பதிலளிநீக்கு
  24. சிந்தனைத்துளி கூறியது...
    எப்படி மல்லி இப்படியெல்லாம் கலைச்சாரலில் உன் திறமைகளைக்கண்டுவிட்டு வந்தால் இங்கே கவியுணர்வை கண்டு வியந்து நிற்க்கிறேன் ஆலினார் மல்லிக்கா அப்படின்னு சொல்லவா.

    சூப்பர் கவிதை இனி தொடர்ந்து வருவோமுல்ல..

    வாங்க வாங்க சிந்தனைதுளி.
    தங்களீன் வருகைக்கும் அன்பான கருத்துக்கும் மனமார்ந்த நன்றி.
    தொடர்ந்து தங்களின் வருகையை எதிர்பார்க்கிறேன். மிக்க நன்றி..


    //அப்துல் கூறியது...
    மிகவும் அருமையான கவிதை வாழ்த்துக்கள் மலிக்கா

    ஆட்டம் அதிரடியாய் ஆடத்தொடங்கிட்டீங்க போல. அசத்துங்க சீமாங்கனி சொன்னதுபோல.//

    ஆடிடுவோம் மிகுந்த மகிழ்ச்சி அப்துல். மிக்க நன்றி. ..

    பதிலளிநீக்கு
  25. நான் தலை ஆட்டுவதர்க்கெல்லாம்
    என்னோடு சேர்ந்து தலையாட்டும்
    நண்பனை விட, என் நிழலே எனக்கு மேல். //


    அதுவும் சரிதான்
    ----------------------------------
    நிஜமான காதல்
    நிழலென்ற கருப்பாக
    நினைவிருக்கும்போதே
    நீங்கிய வெருமையாகி

    அழிக்க முடியாத வரிகள் என்றும் மனதில் நிற்பவை.//

    மிகுந்த மகிழ்ச்சி
    -----------------------------
    இன்றைய காதலர்களின் கவிதையைப் பாருங்கள் :

    என் இனிய தமிழ் அழகியே !
    உன்னை ஆங்கில பாடவேலை முடிந்து !
    இயற்ப்பியல் கூடத்தில் பார்த்தப்போது !
    என்னுள் சில வேதியியல் மாற்றங்கள் !
    என் உயிரியலில் நீ கலந்து விட்டாய் !
    கச்சிதமாக கணக்கு போட்டுவிட்டேன் !
    நீ சம்மதித்தால் சமூகவியலில் சாதிக்கலாம் !
    மறுத்தால் வரலாறு மன்னிக்காது உன்னை !

    எப்படிலாம் கவிதை எழுதுறானுங்க பாததியலா ?//

    காதலித்தால் இப்படியெல்லாம் எழுதத்தான் சொல்லும் அப்படின்னு யாரோ சொல்லுறாக கேக்குதா அய்யூஃப்


    //எனக்கு பிடித்ததே உங்கள் இலக்கிய வார்த்தைகள், உங்களின் படைப்புகளில் ஆயிரம் அர்த்தங்கள் அது எல்லோருக்கும் புரிந்திடாது.(என்னையும் சேர்த்து)//


    ஆகா நான் எழுதுறது ஆருக்கும் புரியல சொல்லுதீகளா.புரியாமல் எழுதுறதுக்கு பேர்தான் கவின்னு அடிக்கடி இங்க வந்து யாரோ சொல்லியிருக்காகளே இருங்க சிபிஐக்கு உத்தரவிட்டு யாருன்னு பாக்கச்சொல்லுறேன் ஹா ஹா.

    //உமக்கு இந்த ஆற்றலைத் தந்த இறைவனுக்கே எல்லாப் புகழும்./

    எனக்குள் எழும் வாக்கியங்களை இங்கே கவிதையாய் வடிக்க உதவும் இறைவனுக்கே புகழனைத்தும்..

    //இன்னும் நிறையா தொகுக்கலாம்னு பார்த்தேன், குடம் வழிஞ்சிடப் போகுதுன்னு விட்டுட்டேன் (நீரோடை).//

    இந்த நீரோடையில் வழிய வழிய கவி எழுதனுமுன்னுதான் எனது ஆசை நீங்க தாளரமா தொகுங்க வழிஞ்சாலும் கடலுக்குதான் போகும் அது காற்றாகி மீண்டும் நீரோடையில் மழையாய் வந்து சேரும்.

    வாழ்த்துக்கள் !!!..///

    வாழ்த்துக்கும் அன்பான கருத்துக்கும் மிக்க நன்றி அய்யூஃப்.

    27 ஆகஸ்ட், 2010 10:44 pm


    arasu கூறியது...
    malli un kavithai maththiyil yaarooda kaviyum wikkamudiyaathunnu sollukira alavuku vawthuthuduvingka poola//

    தங்களின் அன்பான கருத்துக்கு மிக்க நன்றி அரசு..

    பதிலளிநீக்கு
  26. நான் தலை ஆட்டுவதர்க்கெல்லாம்
    என்னோடு சேர்ந்து தலையாட்டும்
    நண்பனை விட, என் நிழலே எனக்கு மேல். //


    அதுவும் சரிதான்
    ----------------------------------
    நிஜமான காதல்
    நிழலென்ற கருப்பாக
    நினைவிருக்கும்போதே
    நீங்கிய வெருமையாகி

    அழிக்க முடியாத வரிகள் என்றும் மனதில் நிற்பவை.//

    மிகுந்த மகிழ்ச்சி
    -----------------------------
    இன்றைய காதலர்களின் கவிதையைப் பாருங்கள் :

    என் இனிய தமிழ் அழகியே !
    உன்னை ஆங்கில பாடவேலை முடிந்து !
    இயற்ப்பியல் கூடத்தில் பார்த்தப்போது !
    என்னுள் சில வேதியியல் மாற்றங்கள் !
    என் உயிரியலில் நீ கலந்து விட்டாய் !
    கச்சிதமாக கணக்கு போட்டுவிட்டேன் !
    நீ சம்மதித்தால் சமூகவியலில் சாதிக்கலாம் !
    மறுத்தால் வரலாறு மன்னிக்காது உன்னை !

    எப்படிலாம் கவிதை எழுதுறானுங்க பாததியலா ?//

    காதலித்தால் இப்படியெல்லாம் எழுதத்தான் சொல்லும் அப்படின்னு யாரோ சொல்லுறாக கேக்குதா அய்யூஃப்


    //எனக்கு பிடித்ததே உங்கள் இலக்கிய வார்த்தைகள், உங்களின் படைப்புகளில் ஆயிரம் அர்த்தங்கள் அது எல்லோருக்கும் புரிந்திடாது.(என்னையும் சேர்த்து)//


    ஆகா நான் எழுதுறது ஆருக்கும் புரியல சொல்லுதீகளா.புரியாமல் எழுதுறதுக்கு பேர்தான் கவின்னு அடிக்கடி இங்க வந்து யாரோ சொல்லியிருக்காகளே இருங்க சிபிஐக்கு உத்தரவிட்டு யாருன்னு பாக்கச்சொல்லுறேன் ஹா ஹா.

    //உமக்கு இந்த ஆற்றலைத் தந்த இறைவனுக்கே எல்லாப் புகழும்./

    எனக்குள் எழும் வாக்கியங்களை இங்கே கவிதையாய் வடிக்க உதவும் இறைவனுக்கே புகழனைத்தும்..

    //இன்னும் நிறையா தொகுக்கலாம்னு பார்த்தேன், குடம் வழிஞ்சிடப் போகுதுன்னு விட்டுட்டேன் (நீரோடை).//

    இந்த நீரோடையில் வழிய வழிய கவி எழுதனுமுன்னுதான் எனது ஆசை நீங்க தாளரமா தொகுங்க வழிஞ்சாலும் கடலுக்குதான் போகும் அது காற்றாகி மீண்டும் நீரோடையில் மழையாய் வந்து சேரும்.

    வாழ்த்துக்கள் !!!..///

    வாழ்த்துக்கும் அன்பான கருத்துக்கும் மிக்க நன்றி அய்யூஃப்.

    27 ஆகஸ்ட், 2010 10:44 pm


    arasu கூறியது...
    malli un kavithai maththiyil yaarooda kaviyum wikkamudiyaathunnu sollukira alavuku vawthuthuduvingka poola//

    தங்களின் அன்பான கருத்துக்கு மிக்க நன்றி அரசு..

    பதிலளிநீக்கு
  27. சிவகாமி கூறியது...
    அற்புதமான கவிதை உங்களுக்கு நிகர் நீங்களே அசத்துறீங்க மல்லி.

    உங்க கவிக்கே தனி ஈர்ப்புதான். மீன்உம் சொல்கிறேன் அசத்தலாய் நிழலை நிஜமாய் வடித்த நிஜக்கவிதை..

    தினமும் பார்ப்பேன் உங்க தளம் கருத்து இப்பொதுதான் கருத்தருகிறேன் இனி நேரம்கிடைக்கும்போது நிச்சயம் தருவேன்.என் கருத்துக்களை.

    வாழ்த்துக்கள் மலிக்காகுட்டி..///
    வாங்கம்ம்மா எப்படி இருக்கீங்க.

    தங்களின் வரவுக்கும் அன்பான கருத்துக்கும் நான் மிகவும் மகிழ்கிறேன்.தாங்களீன் தொடர்வருகையை எதிர்பார்க்கிறேன் மிக்க நன்றிம்ம்மா

    பதிலளிநீக்கு
  28. நட்புடன் ஜமால் கூறியது...
    அருகில் வைத்து கொண்டே அலையும் மனம் - சரியா சொன்னீங்க
    //

    மிக்க நன்றி ஜமால்காக்கா




    சே.குமார் கூறியது...
    அருமையான கவிதை.//

    மிக்க நன்றி குமார்..

    பதிலளிநீக்கு
  29. ஹேமா கூறியது...
    அருமையான யதார்த்தமான...பட்ட அனுபவங்களால் மனதை நெருட கவிதை மல்லிக்கா.

    நிழல் எது நிஜம் எது ?
    கண்டு பிடிக்கக் கஸ்டமாயிருக்கே !

    வாங்க தோழி நலமா?
    தாங்களின் பாசமான கருத்துக்கு மிக்க மகிழ்ச்சி மிக்க நன்றி..

    பதிலளிநீக்கு
  30. ஒ.நூருல் அமீன் கூறியது...
    நிஜத்தை அருகில்வைத்துக்கொண்டே
    நிழலுக்கு அலைக்கிறதே!
    நிலையற்ற மனம்....

    அற்புதமான வரிகள்./


    மிக்க நன்றி நூருல் அமீன்

    28 ஆகஸ்ட், 2010 12:32 am


    ஜெய்லானி கூறியது...
    நிழலா...?
    நிஜமா ...?
    நிச்சயமாய் மனதில்
    நீங்காத கவிதை இது
    //

    நீங்கக்கூடாதுன்னுதானெ எழுதியிருக்கோம்.
    மிக்க நன்றி அண்ணாத்தே..

    பதிலளிநீக்கு
  31. காஞ்சி முரளி கூறியது...
    ////நிஜமான நட்பு..... நீங்கும் பிரிவாக
    கண்காணும்போதே.....கானல் நீராகி

    நிஜமான காதல்..... நிழலென்ற கருப்பாக
    நினைவிருக்கும்போதே.....நீங்கிய வெருமையாகி

    நிஜமான பாசம்.....நிலையற்ற நேசமாக
    நிலையில்லா உலகைப்போல்.....நிலை தடுமாறி

    நிஜமான அத்தனையும்
    நிழலாகிப் போகிறது////

    இந்த வரிகள் அத்தனையும்
    உண்மை...! சத்தியம்...!//

    நன்றி நன்றி நன்றி


    யதார்த்தம்...!

    ஓஹோ...!
    கற்பனைக் கவிதை வடிப்பவர் மலிக்கா என நினைத்தேன்...!
    யதார்த்தமான கவிதையும் நீங்கள் வடிப்பீரா?

    யதார்த்தமான...
    அருமையான கவிதை...!

    வாழ்த்துக்கள்...

    நட்புடன்...
    காஞ்சி முரளி...//

    உங்க அளவுக்கு வராது சகோ
    எழுதிப்பார்போமேன்னு எழுதினேன் கற்பனையை விட யதார்த்தங்கள் கொட்டிக்கிடக்கு இவ்வுலகில் அதை நாம் கண்டுகொண்டால் கற்பனை வென்றிடலாம்.

    மிகுந்த மகிழ்ச்சி சகோ
    மிக்க நன்றி..

    பதிலளிநீக்கு
  32. ///உங்க அளவுக்கு வராது சகோ////

    இது... கொஞ்சம்.. இல்லையில்ல... அதிகமான ஓவராத்தான் தெரியுது...!

    ஏ...! இந்த கொலைவெறி...!
    இப்படி பேசிப்பேசியே... ச்சே... எழுதியேழுதியே... என் உடம்ப ரணக்கள ஆக்குறதுன்னு முடிவே பண்ணிட்டீங்களா...!

    நா வர்றதே "நீரோடை" யில் மட்டுந்தான்... கருதுரையிட...!
    அதையும் கெடுக்கனும்னு முடிவே பண்ணிட்டீங்களா...!

    கவிஞர் மலிக்கா எங்கே...!
    நா... எங்கே...?

    ஓஹோ...! சொல்லாம சொல்றீங்க...! சரி..சரி..! நடக்கட்டும்...!

    நட்புடன்..
    காஞ்சி முரளி...

    பதிலளிநீக்கு

என் கவிக்குழந்தைக்கு தாலாட்டு
உங்கள் கருத்துகள்.

என் கவியுற்றுக்கு நீரோட்டம்
உங்கள் கருத்துகள்

என் கவிகிறுக்கல்களுக்கு கைதட்டல்
உங்கள் கருத்துகள்

என் கவிப்பிழைகளுக்கு நறுகென்ற குட்டு
உங்கள் கருத்துகள்.

ஆகவே அனைத்தும் நீங்கள்
அதனுள்ளே ஓரமாய் நான்..

அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது